இதற்கு பதில் அளித்து அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “தமிழகத்தை பொருத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 425 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மொத்தமாக 3,332 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இதுவரை கடந்தாண்டை விட 7 லட்சம் மெட்ரிக் டன் அளவு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது மெகா கொள்முதல் நிலையங்களை அமைத்து வருகின்றோம். மெகா கொள்முதல் நிலையங்களில் கன்வேயர், தானியங்கி இயந்திரம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் கொள்முதல் அளவு நாளொன்றுக்கு 200 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது” என்றார்.
The post மெகா கொள்முதல் நிலையங்களில் தினசரி 200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல் appeared first on Dinakaran.