இடநெருக்கடி அதிகமாக இருக்கின்ற சென்னை, கோவையில் 60 மாடி அடுக்குமாடி குடியிருப்பு: பேரவையில் அமைச்சர் முத்துசாமி தகவல்

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசுகையில், ‘‘டெல்லி, மும்பை போன்ற நகரங்களிலே 40, 50 மாடிகள் அளவிற்கு வீடுகளை அரசு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டித் தருகிறது. அதேபோல, தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் 50-60 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுகிறார்கள். எனவே, சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் இடநெருக்கடி இருக்கின்ற காரணத்தால் அங்கு 40-60 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அவற்றை விற்பதற்கு அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

பதில் அளித்து அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ‘‘ஒரு பகுதியில் சாலையின் அகலம், விமான நிலையத்தை பொறுத்து எவ்வளவு மாடி வீடு கட்ட முடியும் என்பதை தீர்மானித்து வருகிறோம். எப்எஸ்ஐ பொறுத்து அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயமாக அவர் சொன்ன அத்துணை கருத்துகளும் மனதிலே எடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post இடநெருக்கடி அதிகமாக இருக்கின்ற சென்னை, கோவையில் 60 மாடி அடுக்குமாடி குடியிருப்பு: பேரவையில் அமைச்சர் முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: