இந்தியாவை ஆளும் பாஜகவின் ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என்பது தெளிவாகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பின்பற்றக்கூடிய கட்சியாக பாஜ இருக்கிறது. பெரிய கார்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக செயல்படுகிற அரசாக உள்ளது. கல்விக் கொள்கையின் பெயரால் இந்திய கூட்டாட்சி நெறிமுறைகளை தகர்த்து எறிகிற ஒரு அரசாக செயல்படுகிறது. இந்த ஆட்சியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம்.
நாடு காப்பாற்றப்பட வேண்டும், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் மோடி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முதல்வர் மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்டவைகளில் முன் மாதிரியாக செயல்படுகிறார். இந்திய ஒற்றுமைக்கும், மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என செயல்பட்டு வருகிறார் தமிழ்நாடு முதல்வர். அவருக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம். பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்று வந்துள்ளார். அவர், ஆர்எஸ்எஸ் பிரசாரகராக செயல்பட்டு வருகிறார்.
ஆர்எஸ்எஸ்சின் எடுபிடியாக இருந்து வருகிறார். பிரதமர் மோடி வெளியில் சுதந்திரமாக இருப்பதாக கூறி வருகிறார். ஆனால் பாஜ கட்சியை ஆர்எஸ்எஸ் தான் ஆட்டி வைக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தையே ஏற்றுக் கொள்ளாத ஒரு இயக்கம் தான் ஆர்எஸ்எஸ். அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காமல், இந்தியாவை மதவாத அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதை முறியடிக்கும் போராட்டத்திற்கு இடதுசாரிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மதவாத அடிப்படையில் நாட்டை பிரிக்க முயற்சி ஆர்எஸ்எஸ்சின் எடுபிடி மோடி: டி.ராஜா காட்டம் appeared first on Dinakaran.