ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஒரே பணி செய்பவர்கள் வெவ்வேறு ஊதியத்தில் பணியமர்த்தப்படுவது சமூக நீதிக்கு முரணானது. எனவே காலம் தாழ்த்தாமல் அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இதே போல பகுதி நேரச் சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.  சட்டமன்றத்திலும் இது குறித்துப் பேசி இருக்கிறோம்.தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போலத் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் பகுதி நேரச் சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: