சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன்(கொமதேக) பேசுகையில் “ஒன்றி, மாநில அரசு நிதியுதவியோடு நடைபெறும் நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. காவிரி ஆற்றில் மேட்டூர் முதல் திருச்சி வரை மற்றும் 5 கிளை ஆறுகளை தூர்வாருவது மேம்படுத்துவது முதற்கட்டம்.
இரண்டாவதாக திருச்சியில் இருந்து காவிரி கடல் முகத்துவாரங்களில் கலக்கும் பகுதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்ட திட்டம் 934.30 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் முதல்கட்ட திட்ட நிதியை பெறவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று பதில் அளித்தார்.
The post நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் முதல்கட்ட திட்ட நிதியை பெறவும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.