உத்தரப்பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகள்: யோகி ஆதித்யநாத் பேட்டி

டெல்லி: உத்தரப்பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. அது நிறைய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் சிலரின் சுயநல அரசியல் லாபத்துக்காகவே மும்மொழிக் கொள்கை சர்ச்சை உருவாக்கப்படுகிறது என தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக சாடியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் யோகி ஆதித்யநாத் கூறுகையில், உத்தரப்பிரதேச பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் உத்தரப்பிரதேசம் பாதிக்கப்பட்டுவிட்டதா? புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள் தங்களின் அரசியல் நோக்கங்களை அடைய முடியும். ஆனால் அவர்கள் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பாதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மொழிகள் குறித்த சர்ச்சைக்காக பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக சாடுவது இது இரண்டாவது முறையாகும்.

The post உத்தரப்பிரதேச மாநில பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகள்: யோகி ஆதித்யநாத் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: