திருவனந்தபுரம்: கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுவகைகளை கேரள மதுபான விற்பனைக் கழக சில்லறை கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லறை மதுபான விற்பனை கடைகள் உள்ளன. இவ்வருட புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 31ம் தேதி ஒரே நாளில் கேரளா முழுவதும் ரூ.125.64 கோடிக்கு மது வகைகள் விற்பனையானது. கடந்த 2024 டிசம்பர் 31ம் தேதி ரூ.108.71 கோடி மது வகைகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த நிதியாண்டில் டிசம்பர் 31ம் தேதி வரை ரூ.14,765.09 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
