பணமோசடி வழக்கில் குஜராத் ஐஏஎஸ் அதிகாரி கைது

அகமதாபாத்: குஜராத்தில் 2015ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திர குமார் படேல் கடைசியாக சுரேந்திர நகர் ஆட்சியராக பணியாற்றினார். லஞ்ச வழக்கில் அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த துணை வருவாய் அதிகாரி சந்திரசிங் மோ அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். விண்ணப்பங்களை விரைவாக அங்கீகரிப்பதற்காக அவர் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளார். இதனையடுத்து படேல் எந்தப் பதவியும் ஒதுக்கப்படாமல் இடமாற்றம் செய்யப்பட்டார். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு தொடர்ந்தது. அதில் சம்பந்தபட்டவர்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி படேலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

Related Stories: