புதுடெல்லி: டெல்லியில் 2020ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் உமர் காலித் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் வினய் குவாத்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், “ உமர் காலித் விவகாரத்தில் நியாயமான மற்றும் சரியான நேரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் நியூயார்க் நகர மேயராக பதவி ஏற்றுள்ள மம்தானி, உமர் காலித்துக்கு எழுதி உள்ள கடிதத்தில், “அன்புள்ள உமர் காலித், கசப்புணர்வை பற்றிய உங்களது வார்த்தைகளையும், ஒருவரை அழித்து விடக்கூடாது என்பது பற்றியும் நான் அடிக்கடி நினைத்து பார்க்கிறேன்” என மம்தானி தெரிவித்துள்ளார். இந்த கடிதங்களுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்கள் சிறிதும் ஏற்புடையதல்ல. இதை பாஜ ஒருபோதும் பொறுத்து கொள்ளாது என்று பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்தார்.
டெல்லி கலவர வழக்கில் சிறையில் உள்ள உமர் காலித் விவகாரத்தில் நியாயமான விசாரணை தேவை: அமெரிக்கா எம்.பி.க்கள் வலியுறுத்தல்
- எங்களுக்கு
- தில்லி
- உமர் காலித்
- புது தில்லி
- 2020 டெல்லி கலவரம்
- ஜே.என்.யூ மாணவர் சங்கம்
- ஜனாதிபதி
- தீஹார் சிறை
- இந்தியன்
- யுஎஸ் வினய்…
