சுத்தம் செய்தபோது பரிதாபம்; ஆசிட் டேங்கர் லாரியில் 2 பேர் மூச்சுத்திணறி பலி

பவானி: ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த கோணவாய்க்கால், ராமன் பாலக்காட்டைச் சேர்ந்தவர் யுகானந்தவேல் (45). இவர் அங்கு சர்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வந்தார். இந்த ஸ்டேஷனுக்கு, ஐதராபாத்திலிருந்து சாயப்பட்டறை கழிவு நீரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அலுமினியம் குளோரைடு ஆசிட்டை ஏற்றிவந்து திருப்பூரில் இரு சாய ஆலைகளில் இறக்கிவிட்டு டேங்கர் லாரி வந்தது. சித்தோடு, ஆர்.என். புதூரைச் சேர்ந்த செல்லப்பன் (52) என்ற தொழிலாளி முகத்தில் துணியை கட்டியபடி டேங்கருக்குள் இறங்கி சுத்தம் செய்தார்.

அப்போது, ஆசிட் வீரியம் தாங்காமல் மயங்கி விழுந்தார். உடனடியாக யுகானந்தவேல் மற்றும் சந்திரன் (54) ஆகியோர் டேங்கருக்குள் இறங்கி அவரை மீட்டு வெளியே அனுப்பினர். ஆனால், யுகானந்தவேல், சந்திரன் ஆகிய இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். பவானி தீயணைப்பு படையினர் வந்து இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் இருவரும் இறந்தது தெரியவந்தது. செல்லப்பனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post சுத்தம் செய்தபோது பரிதாபம்; ஆசிட் டேங்கர் லாரியில் 2 பேர் மூச்சுத்திணறி பலி appeared first on Dinakaran.

Related Stories: