கரூர், மார்ச் 30: கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை சீர்குலைத்து விவசாய நிலத்தை அழிக்கும் சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் சமையல் செய்வதற்கு அந்த காலத்தில் சமையல் கேஸ் இல்லாத காரணத்தால் மரக்கட்டை விறகை வைத்து தான் சமைக்க வேண்டும் என்று நிலை இருந்தது .
இதனால் அப்போது இருந்த அரசு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை வெளிநாடுகளில் இருந்து சீமக்கருவலை மர விதைகளை விமானங்கள் மூலம் தூவி சீமை கருவேல மரம் உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் பொதுமக்கள் அந்த மரத்தை வெட்டி முழுமையாக சமையல் செய்வதற்கு விறகாக பயன்படுத்தி வந்தனர். இன்றும் தமிழகத்தில் ராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சீமை கருவேலம் கட்டையை வெட்டி அடுப்பு கறியாக பயன்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் சமையல் செய்வதற்கு எரிபொருளாக சீமை கருவேலம் மரம் தேவைப்பட்டது.
.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த மரத்தின் முள் குத்தி இறந்துபோன விவசாயிகளும் நிறையபேர் உண்டு. சீமை கருவேல மரத்தின் விஷம்இ நாக பாம்பு விஷத்திற்கு இணையானது. தாவரம் முழுமையுமே நஞ்சாக உள்ளது.விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் முளைக்காத வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை. புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.
நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அரிய மூலிகைகளின் இழப்பு. இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன.இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன. எனவே தமிழக அரசும் தனியார் நிலத்தில் உள்ள சீமைகருவேலும் மரங்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் மரங்களை முழுமையாக அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தை பொருத்தவரை அமராவதி ஆற்றங்கரையில் அதிக அளவு சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளது. காவேரி ஆற்றை விட அமராவதி சண்முகா நதி இநன்கஞ்சி ஆறுஇ அதிக அளவு சீமை கருவேல மரம் படர்ந்து கார்டு போல் காட்சி அளிக்கிறது. சில கோயில் நிலங்களிலும் அதிகமான சீமைகருவேல மரங்கள் நிலத்தின் தன்மையை கெடுத்து விவசாயத்துக்கு எதிரியாக காட்சியளிக்கிறது. கரூர் மாவட்டத்தை பொருத்த வரை மட்டும் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் சீமை கருவேலம் மரங்கள் நிறைந்திருப்பதால் அதனை மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்ட நிர்வாகம் கரூர் மாவட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட கலைகல்லூரி அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பு முகாம் மூலமாக சீமை கருவேல் மரக்கன்றுகளை முதற்கட்டமாக வேரோடு அகற்றினார். பிற்காலத்தில் அது மரமாக வளர்வது முழுமையாக தடுக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களை படுத்த அரசு முன்வர வேண்டும்.
The post சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் சீமை கருவேல மரங்களை appeared first on Dinakaran.