கரூர், மார்ச். 29: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம், வெள்ளியணை, அரவக்குறிச்சி, வாங்கல் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றர்.
The post குட்காவிற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.