கரூர், மார்ச். 29: கரூர்-திருச்சி சாலையில் காந்திகிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் வழியாக கரூரில் இருந்து திருச்சி செல்லும் அனைத்து வாகனங்களும் இநத பகுதியின் வழியாக சென்று வருகிறது. தெரசா கார்னர் பகுதியில் இருந்து காந்திகிராமம் வரை சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், இந்த சாலையின் குறிப்பிட்ட தூரம் வரை வடிகால்கள் திறந்த நிலையில் உள்ளன.
இதனால் இரவு நேரங்களில் சாலையில் பயணிக்கும் அனைவரும் பீதியுடன் சென்று வருகின்றனர். இதால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே, திறந்த நிலையில் உள்ள வடிகால்கள் மீது சிலாப் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது. எனவே, அனைவரின் நலன் கருதி திறந்த நிலையில் உள்ள வடிகால்களை சிலாப் கொண்டு மூடுவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கரூர்-திருச்சி சாலையில் வடிகால்களை சிலாப்பால் மூடவேண்டும் appeared first on Dinakaran.