பாபநாசத்தில் பாழடைந்த நிலையில் காவலர் குடியிருப்பு

 

தஞ்சாவூர், மார்ச்29: தஞ்சாவூர் மாவட்டம் பாபாநாசத்தில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர் குடியிருப்பை புதிதாக கட்டித்தர வேண்டும் என காவலர்கள வேண்டுகோள் விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் காவல் நிலைய காவலர்கள் குடியிருப்பானது கடந்த 2002ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும், காவல் ஆய்வாளர் குடியிருப்பு ஒன்றும், உதவி ஆய்வாளர் குடியிருப்பு இரண்டும், காவலர் குடியிருப்பு 18-ம் அமைந்துள்ளது.

தற்போது துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மட்டும் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் குடியிருந்து வந்த அனைத்து நிலை காவலர்களும் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டிடத்தை அனைவரும் காலி செய்து விட்டு வேறு இடத்திற்குச் சென்று, வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் அரவே இல்லததால் தற்போது செடிகொடிகள், முட்புதர்கள் மண்டி காடு போல் காட்சி அளிப்பதுடன், விஷ ஜந்துக்களின் கூடாரமாக காவலர் குடியிருப்பு கட்டிடம் மாறியுள்ளது.

மேலும் பாபநாசம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே, பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள பாபநாசம் காவலர் குடியிருப்பு கட்டிடத்தை முழுமையாக இடித்துவிட்டு, தமிழக காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக புதிய காவலர் குடியிருப்பு கட்டித் தரப்படுமா என காவல்துறையினர் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

The post பாபநாசத்தில் பாழடைந்த நிலையில் காவலர் குடியிருப்பு appeared first on Dinakaran.

Related Stories: