பேரையூர், ஜன. 14: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டியில் வசிப்பவர் செல்வராஜ் மகன் சுரேஷ்பாபு (36). இவர் சாப்டூரில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக இருக்கிறார். இவர் தனது டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்றார். அவர் திரும்பி வந்தபோது டூவீலர் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் சுரேஷ்பாபு புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டூவீலர் திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
