திமுக மகளிரணி பொங்கல் விழா; தெற்கு மாவட்ட செயலாளர் பங்கேற்பு

 

திருப்பரங்குன்றம், ஜன. 14: மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் கலந்து கொண்டார். மதுரை, திருப்பரங்குன்றம் அருகில் உள்ள தனக்கன்குளத்தில், தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அலுவலகத்தில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி தலைமை வகித்தார். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் மகளிரணி மற்றும் திமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மகளிரணி நிர்வாகிகளுக்கு, மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டி பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

Related Stories: