குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் போஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரை நகர தலைவராக பாஜ தலைமை சமீபத்தில் நியமனம் செய்தது. தொடர்ந்து, இவர் கடந்த மாதம் குடியாத்தத்தில் அதிக ஆட்களை வரவழைத்து பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தினார். கோஷ்டி மோதல் காரணமாக இவர் மீது பல்வேறு புகார்கள் தலைமைக்கு சென்றது. இதனால் மனமுடைந்த நகர தலைவர் ஜெகன் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாராம். நிர்வாகிகளிடம் கேட்டதற்கு நகர தலைவர் தனது ராஜினாமா கடிதத்தை முறையாக மாவட்ட தலைவர் மற்றும் மாநில தலைமைக்கு அனுப்பவில்லை. சமூக வலைதளத்தில் மட்டும் பதிவிட்டுள்ளார் என்றனர்.
The post குடியாத்தம் நகர பாஜ தலைவர் திடீர் விலகல் appeared first on Dinakaran.