சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கடந்த வாரம் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் உள்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் குழுவில் உள்ளனர்.
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துகளை பெற உள்ளது. பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கை தயாரித்து வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
