விலை போகாதவன் நான்: சீமான் பரபரப்பு பேச்சு

 

தூத்துக்குடி: வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: வேலுநாச்சியார் ஏழு மொழி கற்று அதில் புலமை பெற்று வாள்வீச்சு, வில்லம்பு, சிலம்பம், குதிரை ஏற்றம், யானை போர் பயிற்றிருந்தார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு கூப்பிட்டு கொடுக்கிறது. விடுதலைக்காக போராடிய வீரர்களுக்கு யாருக்காவது பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டிருக்கிறதா? அரை சதவீதம், ஒரு சதவீதம் வாக்கு வைத்திருப்பவர்கள் எல்லாம் கூட்டணி பற்றி பேசுகிறார்கள்.

எட்டுக்கும் மேற்பட்ட சதவீதம் வாக்கு வைத்திருக்கும் என்னிடம் எத்தனை பேர் பேரம் பேசி இருப்பார்கள். அதற்கெல்லாம் விலை போகாதவன் நான். நமது வெற்றியை தீர்மானிக்க முருகர் ஓடி வருவார். தன்னுடைய பேரன் வெற்றி பெற்று காவடி எடுத்து ஆடும் போது முருகனும் அருகே ஆடுவான். இந்தியாவையே என் தமிழ் ஆளும். ஏன் உலகத்தையே தமிழ் ஆளும். நடக்க இருக்கின்ற தேர்தலில் நாங்கள் உறுதியாக வெல்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

விஜய் மீது சாடல்
நமது எச்சிலில் தான் பல பேர் கட்சி நடத்தி வருகிறார்கள். நமது கட்சியின் வண்ண கொடி தான் விஜய்க்கும். அதாவது விஜய் கட்சிக்கு எந்த ஒரிஜினிலாட்டியும் கிடையாது. நம்முடைய கட்சியிலிருந்து தான் சிலவற்றை சுவீகரித்து உள்ளனர்.

Related Stories: