அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் விரைவில் தவெகவுக்கு வருவார்கள்: செங்கோட்டையன் பேட்டி

 

கோபி: அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் விரைவில் தவெகவுக்கு வருவார்கள் என கோபியில் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தவெக கட்சி அலுவலத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினத்தை முனிட்டு அவரது உருவப்படத்துக்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல பொறுப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்றார்.

கோபியில் உள்ள 296 பூத்களில் பணியாற்ற தவெக பொறுப்பாளர்கள் உள்ளனரா? என்ற கேள்விக்கு, பூத்களில் பணியாற்ற உள்ள விவரங்களை 3 நாளில் தயாரித்து விடுவோம் என்றார். ஓபிஎஸ் தவெகவிற்கு வர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ‘‘ஓபிஎஸ் தரப்பில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஆனால் ஓபிஎஸ் தவெகவில் இணைவாரா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார். அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகள் தவெகவிற்கு எப்போது வருவார்கள் என்ற கேள்விக்கு ‘‘விரைவில் வந்துவிடுவார்கள்’’ என்றார்.

Related Stories: