உ.பி அரசு மையத்தில் இரவு உணவு சாப்பிட்ட 4 குழந்தைகள் பலி, 16 பேர் கவலைக்கிடம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் உணவு சாப்பிட்ட 4 குழந்தைகள் பலியானார்கள். மேலும் 16 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள பாரா பகுதியில் அரசு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 147 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெற்றோர் இல்லாதவர்கள்.

இந்நிலையில் இங்குள்ள 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் செவ்வாயன்று மாலை திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 குழந்தைகள் உயிரிழந்தனர். மீதமுள்ள 16 பேருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post உ.பி அரசு மையத்தில் இரவு உணவு சாப்பிட்ட 4 குழந்தைகள் பலி, 16 பேர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Related Stories: