திங்கள்சந்தை, மார்ச் 28: முளகுமூடு நாஞ்சில் பால் நிறுவனத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட வரவேற்பு அறையை குழித்துறை மறைமாவட்ட செயலர் அருட்பணி அந்தோணி முத்து அர்ச்சித்து திறந்து வைத்தார். நாஞ்சில் பால் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அருட்பணி இராபர்ட் ஜாண் கென்னடி அனைவரையும் வரவேற்று, இப்புதிய வரவேற்பறை அலுவல் சம்பந்தமான வாடிக்கையாளர்கள், விருந்தினர்கள், நிறுவனத்துடன் தொடர்புடைய வெளிநபர்கள் என அனைவரையும் சிறந்த முறையில் உபசரித்து சேவை வழங்க ஏதுவாக இருக்கும் என்று கூறினார். திறப்பு நிகழ்ச்சியில் இணை மேலாண்மை இயக்குநர் பிரான்சிஸ் சேவியர் மற்றும் நிதி பரிபாலகர் ஜாண் பென்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நிலையப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
The post நாஞ்சில் பால் நிறுவனத்தில் புதிய வரவேற்பறை திறப்பு appeared first on Dinakaran.
