ஒன்றிய அரசு அடாவடி சென்னை வானிலை ஆய்வு மைய இணையத்திலும் இந்தி திணிப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்திலும் இந்தி திணிப்பை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தின் வானிலை அறிக்கையை ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் வானிலை நிலவரங்களை தினமும் அப்டேட் செய்து வருகிறது. அது போக மழை இருப்பின், 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதற்கான சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கம் உள்ளது.

இந்த இணைய பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் அன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இதில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பு எதிராக தமிழக அரசு பேசி வரும் நிலையில் வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இந்தி மொழி சேர்க்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா கூறியிருப்பதாவது, “சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியை சேர்க்க இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்திய வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தலால், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியில் முன்னறிவிப்பு வெளியிட சென்னை மையத்தில் மொழிப்பெயர்பாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

The post ஒன்றிய அரசு அடாவடி சென்னை வானிலை ஆய்வு மைய இணையத்திலும் இந்தி திணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: