ராஜஸ்தானில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் வந்து ஏ.டி.எம்.மில் ரூ.29.69 லட்சம் கொள்ளை

ஐதராபாத்: ராஜஸ்தானில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் வந்து ஏ.டி.எம்.மில் ரூ.29.69 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அருகே ரவிரியாலாவில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்-மில் கடந்த 2ம் தேதி கொள்ளையடித்து சென்றனர்.

கேஸ் கட்டர் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை கட் செய்து 4 நிமிடங்களில் பணத்தை கொள்ளையடித்தனர். ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் கட்டர் மூலம் கட் செய்வது குறித்து கொள்ளையர்கள் யூடியூப் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்டனர். ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த 10 பேரில் 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

ராஜஸ்தானை சேர்ந்த ராகுல்கான் (25) ஐதராபாத்தில் ஜேசிபி மெக்கானிக்காக பணிபுரிகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த முஸ்தகீம் கான் (28) உடன் சேர்ந்து ரவிரியாலாவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்தனர். இருவரும் ராஜஸ்தானை சேர்ந்த ஷாருக் ஷீர் கான் (25), ரபீக் கான் (25) உள்பட 8 பேருடன் சேர்ந்து கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது.

மார்ச் 24ல் மீண்டும் பல இடங்களில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க வந்தபோது 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், கார், ஏ.டி.எம். கொள்ளைக்கு பயன்படுத்தும் கேஸ் கட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ராஜஸ்தானில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் வந்து ஏ.டி.எம்.மில் ரூ.29.69 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: