கிருஷ்ணகிரி, மார்ச் 27: பர்கூர் சிந்தகம்பள்ளி, எட்டிக்குட்டி கிராமத்தில் விவசாயி சிவன் என்பவரது நிலத்தின் அருகே, மின்வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு டிரான்ஸ்பார்மரில் இருந்த ₹35 ஆயிரம் மதிப்பிலான 40 கிலோ காப்பர் ஒயரை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த தண்டாவன்பள்ளி மின்வாரிய இளநிலை பொறியாளர் சுப்பிரமணி, இதுகுறித்து கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, காப்பர் ஒயரை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றது.
The post டிரான்ஸ்பார்மரில் 40 கிலோ காப்பர் ஒயர் திருடிய மர்ம நபர்கள் appeared first on Dinakaran.