போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றம்

கிருஷ்ணகிரி, மார்ச் 27: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இருந்து திருப்பத்தூருக்கு செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள புளியமரக்கிளைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். இந்த சாலையின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட புளியமரங்கள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு, முறையாக இடைவெளி விட்டு நடப்பட்ட இந்த புளியமரங்கள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் தந்து வந்தன.

இந்த மரங்களை ஆண்டுக்கு ஒருமுறை அந்தந்த பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டு, அந்த தொகையினை பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் பயன்படுத்தி வந்தனர். இந்த மரங்களின் கிளைகள், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நீட்டிக்கொண்டு இருந்தது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து கலெக்டருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கலெக்டர் தினேஷ்குமாரின் உத்தரவின் பேரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த புளிய மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

The post போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: