தாறுமாறாக வந்த டிராக்டர் சிறைபிடிப்பு

போச்சம்பள்ளி, மார்ச் 30: போச்சம்பள்ளி அடுத்த பாரூர் பெரிய ஏரியில் மண் அள்ளுவதற்கு, அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக, இந்த ஏரியில் இருந்து டிராக்டர்களில் மண் எடுத்து செல்லப்படுகிறது. இதில் சில டிராக்டர் டிரைவர்கள், அவசர கதியில் தாறுமாறாக ஓட்டிச்செல்கின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் பீதியடைகின்றனர். பெண்கள், பள்ளி குழந்தைகள் செல்வதால் டிராக்டரை மெதுவாக ஓட்டிச்செல்லும்படி கிராம மக்கள் சிலர் அறிவுறுத்திய போதிலும், டிராக்டர் டிரைவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று, மண் லோடு ஏற்றிக்கொண்டு அதிவேகமாக தாறுமாறாக வந்த டிராக்டரை, கிராம மக்கள் சிறை பிடித்துடன், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது போல் நடந்து கொள்ளக்கூடாது என எச்சரித்தனர். அதனை டிராக்டர் டிரைவர் ஏற்றுக்கொண்டதால், சிறை பிடித்த டிராக்டரை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post தாறுமாறாக வந்த டிராக்டர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: