தேன்கனிக்கோட்டை, மார்ச் 26: தேன்கனிக்கோட்டை அடுத்த முனுவனப்பள்ளி, தொட்டபிலிமுத்திரை கிராமத்தில் மாந்தோப்பு அருகில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை தாசில்தார் மங்கை, அந்தேவனப்பள்ளி ஆர்ஐ அன்பு மற்றும் வருவாய்துறையினர், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு டிப்பர் லாரியில் செம்மண் அள்ளி கொண்டிருந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் டிரைவர் தப்பியோடிவிட்டார். செம்மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆர்ஐ அன்பு கொடுத்த புகாரின் பேரில், டிப்பர் லாரி உரிமையாளர் மற்றும் தப்பியோடிய டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.