தர்மபுரி, மார்ச் 26: தர்மபுரி குப்பாக்கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன்(67). கலைக்கூத்தாடியான இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 3 மகள், 1 மகன் உள்ளனர். வாய் பேச முடியாத, காது கேட்காத அன்பழகன், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒகேனக்கல் சென்று சுற்றுலா பயணிகளிடையே நடனமாடி, அவர்கள் கொடுக்கும் பணத்தை கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக ஜீவனம் நடத்தி வந்தார். கடந்த 22ம் தேதி வழக்கம்போல் ஒகேனக்கல் சென்றார். கூத்தாடி முடித்ததும் வழக்கம்போல் காவிரி ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
The post ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி முதியவர் பலி appeared first on Dinakaran.