நீலகிரி கூடலூரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாளை நடக்கிறது

ஈரோடு, மார்ச் 27: பிளஸ்-2 முடித்த பிறகு உயர் கல்வி படிப்பது தொடர்பான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கூடலூர், கேலிகட் ரோட்டில் உள்ள நாடார் கல்யாண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் உயர் கல்வி தொடர்பான கல்வி ஆலோசனைகளையும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறித்த ஆலோசனைகளையும், சினிமா துறையில் உள்ள எண்ணற்ற படிப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. கல்வி கண்காட்சியில் இன்ஜினீயரிங், கலை அறிவியல், பார்மசி, பாலிடெக்னிக் உள்பட 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு முன்னணி கல்லூரிகளும், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள கல்லூரிகளும் கண்காட்சியில் அரங்குகள் அமைக்க உள்ளன. இந்த கல்வி கண்காட்சியை காண வரும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களது கல்லூரியில் உள்ள படிப்புகள், கல்வி கட்டணங்கள், விடுதி வசதி, பஸ் வசதி, ஆய்வக வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். படிப்புகளின் விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன. கல்வி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஒமேகா ஈவன்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் செய்துள்ளார்.

The post நீலகிரி கூடலூரில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: