ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 50% அமெரிக்க இறக்குமதிகளின் வரியை குறைக்க இந்தியா முடிவு?

புதுடெல்லி: மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் அதே அளவு வரி அந்தந்த நாடுகளுக்கும் விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எதிராக இந்த பரஸ்பர வரி விதிப்பு வரும் ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த பரஸ்பர வரி விதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 87 சதவீதம் பாதிக்கும். மொத்தம் ரூ.5.75 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

இந்த பரஸ்பர வரியிலிருந்து தப்பிக்க இந்திய அரசு அமெரிக்காவுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பரஸ்பர வரியிலிருந்து தப்பிக்க 55% அமெரிக்க இறக்குமதி பொருட்களின் வரியை 5% முதல் 30% வரை குறைக்க இந்தியா தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி வரையிலும் வருவாய் இழப்பு ஏற்படும். இதுவரை இதற்கான ஒப்பந்தம் எதுவும் முடிவாகவில்லை. அதே சமயம், வேறு வழிகளையும் இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

The post ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 50% அமெரிக்க இறக்குமதிகளின் வரியை குறைக்க இந்தியா முடிவு? appeared first on Dinakaran.

Related Stories: