வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுத்திணறி பலி

தொண்டாமுத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம் பழையனூரை சேர்ந்தவர் சிவா (40). இவரது மனைவி நித்யா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சிவா கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூருவில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் கோவைக்கு வந்த சிவா, பூண்டி மலை அடிவாரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தார். பின்னர் நேற்று இரவு மூங்கில்குச்சி உதவியுடன் 5.5 கிமீ. நடந்து 7வது மலையை அடைந்தார். அங்கு ஈசனை தரிசனம் செய்தார்.

சிறிது நேரத்துக்கு பின் மலையைவிட்டு கீழே இறங்கினர். நேற்று அதிகாலை 3வது மலைக்கு வந்தபோது சிவாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. நண்பர்கள் அவருக்கு முதலுதவி சிசிச்சை அளித்தனர். இருந்தாலும் பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏற்கனவே இதய கோளாறுக்காக பேஸ்மேக்கர் கருவி சிவா பொருத்தியுள்ளார். இரவு முதல் விடிய விடிய மலை ஏறி இறங்கியதால் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சுத்திணறி பலி appeared first on Dinakaran.

Related Stories: