தமிழ்நாடு அளவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு குறள் வினாடி வினா போட்டி

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூலாகும் எனவும், மக்கள் தம் அகவாழ்வில் கூடி வாழவும் புற வாழ்வில் இன்பமுடன் வாழ வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குவதாகவும் திறக்குறளைப் படித்தறியும் நோக்கு வளரும் இளந்தலைமுறையினரிடையே பல்கிப் பெருக வேண்டுமென்பதால் திருக்குறள் முழுமையாக படிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி காட்சி ஊடகம் வாயிலாக கலைஞர் தொலைக்காட்சி மூலம் ஒளிப்பதிவு செய்யப்பெற்று ஒளிபரப்பப்படும்.

2023-24ஆம் ஆண்டிற்கு காட்சி ஊடகங்களும் இணைந்து தமிழ்நாடு அளவில் பள்ளி / கல்லூரி மாணாக்கர்களுக்கு குறள் வினாடி வினா போட்டிகளின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று போட்டிகள் மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் 26.03.2025 அன்று முற்பகல் 08.00 மணி அளவில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் நடைபெறவுள்ள இப்போட்டியில் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளி மாணவர்கள் 3 கல்லூரி மாணவர்கள் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பெற்று 38 மாவட்டங்களிலிருந்தும் பள்ளி மாணாக்கர்கள் (38X3= 114 பேர்) மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் (38X3= 114 பேர்) என மொத்தம் 228 மாணாக்கர்களைக் கொண்டு முதல் சுற்று போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் தரவரிசையின் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் பள்ளி/ கல்லூரி மாணாக்கர்கள் 60 பேர், ஆறு குழுக்களாக (குழுவிற்கு 10 பேர்) பிரிக்கப்பட்டு இரண்டாம் சுற்றுப் போட்டியும் மதுரையிலேயே நடைபெறவுள்ளது.

இரண்டாம் சுற்றில் முதலிடம் பெறும் மூன்று குழுக்களைச் சேர்ந்த 30 பள்ளி மாணாக்கர்கள் மற்றும் மூன்று குழுக்களைச் சேர்ந்த 30 கல்லூரி மாணாக்கர்கள் சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 27.03.2025 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இறுதி சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வர். அவற்றில் முதல் பரிசு ரூ. 1500/-, (10 பேர்) இரண்டாம் பரிசு ரூ. 1200/-, (10 பேர்), மூன்றாம் பரிசு ரூ. 1000/-, (10 பேர்) என பள்ளி / கல்லூரி மாணாக்கர்கள் மொத்தம் 60 பேருக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் சென்னையில் வழங்கப்படவுள்ளன.

The post தமிழ்நாடு அளவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு குறள் வினாடி வினா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: