பட்டாம்பி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

 

பாலக்காடு, மார்ச் 25: பட்டாம்பி அருகே பத்ரூமில் குளிக்க சென்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.  பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி கல்லூரி தெருவை சேர்ந்த முகமத ரீயாஷ் ராஷிதா தம்பதியினர் மகன் ஜாஷிம் ரியாஸ் (15). இவர் பட்டாம்பியிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10 வது வகுப்பு படித்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டிலுள்ள பாத்ரூமில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஸ்விட்ச் போர்டில் ஈரக்கையுடன் சுவிட்சை அழுத்த மின்சாரம் பாய்ந்து, தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

மகன் பாத்ரூமை விட்டு வெளியே வராத காரணத்தால் பெற்றோர், கதவை உடைத்து பார்த்தபோது மகன் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்து ரியாசை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பட்டாம்பியிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக ஒத்தப்பாலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் ஜாஷிம் ரியாஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பட்டாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

The post பட்டாம்பி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: