திருவோணம் வட்டத்தில் 27ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

 

ஒரத்தநாடு, மார்ச்25: திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் எதிர்வரும் 27ம் தேதி நடைபெறும் என திருவோணம் வட்டாட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்இது தொடர்பாக வட்டாட்சியர் வௌியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் ஊரணிபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் எதிர்வரும் 27ம் தேதி ஊரணிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்காபங்கஜம் தலைமையில் நடைபெற உள்ளது.

முகாமில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளனர். எனவே, திருவோணம் வட்டத்திற்கு உட்பட்ட சுற்றுப்புற கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரில் வந்து அளித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post திருவோணம் வட்டத்தில் 27ம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: