திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

பரமத்திவேலூர், மார்ச் 25: பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை ஒன்றிய திமுக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கபிலர்மலையில் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்தார். கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உமா ராணி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதி மற்றும் நகர, ஒன்றியம், கிளை பொறுப்பாளர்கள், சார்பு அணியினர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: