தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு: வெள்ளநீர்க் கால்வாய் அமைக்கும் பணி 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கீழ்பவானி பாசன திட்டம்: ரூ.933 கோடி (நபார்டு நிதி) மதிப்பீட்டில் கீழ்பவானி பாசன திட்டத்தை சீரமைக்க முடிவு செய்து, 25.2.2021ல் பணிகள் துவக்கப்பட்டிருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இதற்கு தேவையான பணத்தை ஒதுக்கீடு செய்து, பணிகள் விரைந்து நடைபெற வழி செய்யப்பட்டது.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு: காவிரி ஆற்றின் வெள்ள உபரி நீரை மாயனூர் கதவணையிலிருந்து கால்வாய் மூலம் கொண்டு செல்லும் இத்திட்டத்திற்கு இந்த 4 ஆண்டுகளில் ரூ.296 கோடி செலவு செய்யப்பட்டு நில ஆர்ஜிதப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்திருக்கிறது. கால்வாய் வெட்டும் பணிக்காக ரூ.278 கோடி செலவு செய்யப்பட்டு 83 சதவிகித பணிகள் முடிந்திருக்கிறது.
மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தனர்.
காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்து பேச உரிமை கிடையாது என்றோம். நம் எதிர்ப்பால் திட்ட அறிக்கையை காவிரி ஆணையம் திருப்பி அனுப்பிவிட்டது. தமிழ்நாட்டின் அனுமதியின்றி காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது என மத்திய வனத்துறை தெரிவித்து விட்டது. தமிழ்நாடு அரசின் முழு சம்மதத்தை பெற்றால் தான் மேகதாது அணை கட்ட முடியும். எந்த கொம்பனாலும் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
* டெல்டா தூர் வார 114 கோடி ஒதுக்கீடு….
கடந்த 4 ஆண்டுகளாக டெல்டா குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை நிலைமைக்கேற்றவாறு சரியான நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன. டெல்டா அமைப்பில் உள்ள நீர்ப்பாசன வாய்க்கால்கள் ஒவ்வொரு வருடமும் முறையாக தூர்வாரப்பட்டதன் விளைவாக, மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் கடைமடைவரை தங்குதடையின்றி சென்றடைந்தது. இந்த ஆண்டும், ஜூன் 12ம் நாளன்று மேட்டூர் அணையை திறக்க ஏதுவாக, டெல்டா அமைப்பில் உள்ள நீர்ப்பாசன வாய்க்கால்களை தூர்வார முதல்வர் ரூ.114 கோடி ஒதுக்கியுள்ளார்.
* 22 வழக்குகள் தொடர்ந்துள்ளோம்….
நதி நீர் பிரச்னைக்காக 22 வழக்குகள் தொடர்ந்துள்ளோம். காவிரிக்கு 9, முல்லை பெரியாறுக்கு 9, பாலாறுக்கு 2 ஆகிய வழக்குகளுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்கிறோம் என்று துரைமுருகன் கூறினார்.
The post தமிழ்நாட்டின் அனுமதி பெறாமல் மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.