ஒன்றிய நிதித்துறை செயலாளராக அஜய் சேத் ஐஏஎஸ் நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய நிதித்துறையின் புதிய செயலாளராக அஜய் சேத் நியமிக்கப்பட்டார். 1987ம் ஆண்டு கர்நாடக பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அஜய்சேத், தற்போது பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளராக உள்ளார். அவரது நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய நிதித்துறை செயலாளராக இருந்த துஹின்காந்த் பாண்டே, சமீபத்தில் செபி தலைவராக நியமிக்கப்பட்டதால், அவரது இடத்திற்கு அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post ஒன்றிய நிதித்துறை செயலாளராக அஜய் சேத் ஐஏஎஸ் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: