உகாதி, ரம்ஜான் பண்டிகைகள் கொண்டாட்டம்; இன்றும் நாளையும் மக்களவை கூட்டம் நடக்காது: அடுத்த வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவை செயல்படும்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜன. 28-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கி பிப்.13-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட அமர்வு மாா்ச் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் ஏப்ரல் 2 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று மற்றும் நாளை மக்களவை கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று தெரிவித்தார்.

இன்று தெலுங்கு வருட பிறப்பான உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பிறை தென் படுவதை பொறுத்து நாளை அல்லது நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை எடுக்கப்பட பல்வேறு துறைகளின் சம்மந்தமான கோரிக்கைகள் திங்கள்கிழமையன்று அவையில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் இரண்டு நாள் விடுமுறை ஆனதால் அடுத்த வாரம் மார்ச் 28(சனிக்கிழமை) மற்றும் மார்ச் 29(ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் மக்களவை செயல்படும்.

அப்போது எந்த கேள்விகளும் எடுத்து கொள்ளப்படாது. முன்னதாக மாநிலங்களவையிலும் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. சமீபத்தில், மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்காக, பிப்ரவரி 1 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று நாடாளுமன்றம் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: