சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ‘க்ரோக்’-ஐ எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பாஜக: மோடி முதல் அனைவரையும் அம்பலப்படுத்துவதால் அதிர்ச்சி

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக, தற்போது ‘க்ரோக்’-ஐ எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறது. மோடி முதல் அனைத்து தலைவர்களின் செயல்பாடுகளையும் அம்பலப்படுத்துவதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்கள் சாட்-பாட்டுகளை அறிமுகப்படுத்தியது போல ‘எக்ஸ்’ தளத்தின் ‘க்ரோக்’ ஏ.ஐ சாட்-பாட்டை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி உள்ளார். இப்போது ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘க்ரோக்’ சாட்-பாட் அளிக்கும் பதில்களைச் சுற்றி பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மையில் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்த க்ரோக், வரம்பு மீறி கொச்சையான சொற்களைப் பயன்படுத்தியதால் அப்பதிவு வைரலானது.

வரலாறு, சினிமா, அரசியல் விமர்சனங்கள், சித்தாந்தங்கள் என அனைத்துத் தலைப்புகளை ஒட்டிய கேள்விகளுக்கும் க்ரோக் வெளிப்படையான பதில்களைப் பதிவு செய்வதால் ‘எக்ஸ்’ தளத்தில் பயனர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. சிலர், க்ரோக்கின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்ய வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், க்ரோக்கின் பதில்களைப் பகிர்ந்து ஜெமினி ஏ.ஐ, ஓபன் ஏ.ஐ சாட்பாட்டுகளுடன் ஒப்பிடுகையில் க்ரோக் தனித்து நிற்கிறது என ஆதரவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் க்ரோக் அளிக்கும் வெளிப்படையான பதில்களில் ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அத்தனை கேள்விகளுக்கும் க்ரோக் பதிலளித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் க்ரோக் பதிலை பார்த்து, சமூக வலைதளங்களில் தகராறு செய்து கொள்கின்றனர்.

இந்தச் சூழலில், பிரதமர் மோடி, பாஜக, ராகுல் காந்தி, காங்கிரஸ் குறித்து சிலர் கேட்ட கேள்விகளுக்கு க்ரோக் அளித்த பதில்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. மோடி பிரதமரான பிறகு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புகள் குறித்த கேள்விகள் கேட்டபோது, ​​அதற்கு க்ரோக் அளித்த பதிலில், ‘மோடி ஊடகங்களுக்கு முன் தோன்றுவதில்லை; அவர் தான் பேச வேண்டிய கருத்துகளை அமித் ஷாவிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மோடி அளித்த அனைத்து நேர்காணல்களும் (முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களுடன்) எழுதப்பட்டதாகத் தெரிகிறது என்று க்ரோக் கூறியுள்ளது. அதேபோல் மற்றொருவர், ‘நாட்டில் யார் அதிக போலிச் செய்திகளைப் பரப்புகிறார்கள்?’ என்று கேட்ட போது, நாட்டின் பல முக்கிய ஊடக நிறுவனங்களையும், அவற்றின் உயர் அதிகாரிகளின் பெயர்களையும் க்ரோக் கூறியுள்ளது.

முக்கிய ஊடக நிறுவனங்களில் பாஜகவின் செல்வாக்கு குறித்து கேட்டபோது, ​​மோடிக்கு நெருக்கமான அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் அதிபர்கள் முக்கிய ஊடக நிறுவனங்களின் தலைவர்களாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மத வெறுப்பைப் பரப்பும் அரசியல்வாதிகள் யார்? என்று கேட்டபோது, ​​பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் போன்றவர்கள் மத வெறுப்பை தீவிரமாக ஊக்குவிக்கின்றனர் என்று க்ரோக் கூறியுள்ளது. இதுபோன்ற க்ரோக்கின் பதில்கள், பாஜகவினர் மத்தியில் கோபத்தை அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் க்ரோக்கின் பதில்கள் காங்கிரசுக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு ஆயுதமாக மாறிவிட்டன.

அதனால் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக, ‘க்ரோக்கை எப்படி எதிர்கொள்வது?’ என்று தெரியாமல் தலையை சொறிந்து கொண்டிருப்பதாக பேச்சு உள்ளது. ஒரு கட்டத்தில் பாஜகவை சேர்ந்த சிலர், ‘கோ பேக் க்ரோக்’ என்ற ஹேஷ் டேக்கையும் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இந்தியாவில் க்ரோக்கின் செயல்பாடுகள் தொடர்பாக ஒன்றிய அரசு ‘எக்ஸ்’ தளத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகின; ஆனால் அந்த தகவல் உண்மையல்ல என்று இப்போது தெரியவந்துள்ளது.

மத வெறுப்பைப் பரப்பும் அரசியல்வாதிகள் யார்? என்று கேட்டபோது, ​​பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங் போன்றவர்கள் மத வெறுப்பை தீவிரமாக ஊக்குவிக்கின்றனர் என்று க்ரோக் கூறியுள்ளது.

The post சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ‘க்ரோக்’-ஐ எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பாஜக: மோடி முதல் அனைவரையும் அம்பலப்படுத்துவதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: