காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் டிரைவர்கள் சோர்வடைகின்றனர். அடுத்த 2 மாதங்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையில் ஓடக்கூடிய 3 ஆயிரம் பேருந்துகளில் 5 ஆயிரம் டிரைவர், கண்டக்டர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மின் விசிறி பொருத்தப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் இருக்கையின் மேல் பகுதியில் மின் விசிறி பொருத்துப்படுகிறது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகம் கூறியதாவது: சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், பணியாளர்களின் நலனை உறுதி செய்யும் வகையில், இந்த கோடை காலத்தில், ஓட்டுநர்களுக்கு அருகில் மின்விசிறி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் உள்ள 3,407 பேருந்துகளில் 1,994 பேருந்துகளில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பேருந்துகளில் மின்விசிறி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
The post சென்னையில் அதிகரிக்கும் வெப்பம் மாநகர பஸ்களில் மின்விசிறி பொருத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.