நாமக்கல்: நாமக்கல்லில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ேநற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் மே மாதம் 5ம் தேதி, மதுராந்தகத்தில் வணிகர் சங்க மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் சாதாரண வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
ஒன்றிய, மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் எங்களின் பிரச்னைகளை சரி செய்யும் இடத்தில் இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் வணிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post மே 5ல் வணிகர் சங்க மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு: விக்கிரமராஜா தகவல் appeared first on Dinakaran.