செட்டி ஏரிக்கரையில் நெகிழி மாசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

அரியலூர், மார்ச் 23: அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரிக்கரையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்டம் நிர்வாகம் சார்பில் நெகிழி கழிவுகளை சேகரித்தல், பொது இடங்களை சுத்தம் செய்தல் மற்றும் நெகிழி மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் தர்மராஜன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ப்ரீத்தி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் அகல்யா மற்றும் தன்னார்வலர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் பங்குகொண்டு ஏரிக்கரைகளில் கிடந்த நெகிழி கழிவுகளை அகற்றினர். முன்னதாக மீண்டும் மஞ்சப்பை குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர், தூய்மை உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

The post செட்டி ஏரிக்கரையில் நெகிழி மாசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: