வரும் 28ம்தேதி தவெக பொதுக்குழு கூட்ட பணிகளை மேற்கொள்ள 5 குழு அமைப்பு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடு தற்போது நடந்து வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு, ஊடக மேலாண்மை குடு, உபசரிப்பு குழு ஆகிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வரும் 28ம்தேதி தவெக பொதுக்குழு கூட்ட பணிகளை மேற்கொள்ள 5 குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: