ஈரோடு: ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளன. முதல் நாளான இன்று மாமிச உண்ணிகள், கால் தடம், சாணம் ஆகியவற்றின் அடையாளங்கள் மூலம் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 76 குழுக்களாக பிரிந்து, ஒரு குழுவிற்கு 4 பேர் வீதம், 300-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
