ஹமாஸ் அமைப்புடன் தொடர்பு குற்றச்சாட்டில் கைது இந்திய மாணவரை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை

நியூயார்க்: ஹமாஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இந்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.அவரை நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் மாணவர் விசாவில் வசித்து வரும் இந்தியர் பதர் கான் சூரி. இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்த மாப்ஹேஸ் சலேவை திருமணம் செய்துள்ளார்.பதர்கான் ஜார்ஜ்டவுன் பல்கலையின், வெளிநாட்டுச் சேவைப் பள்ளியின் ஒரு பகுதியாக இருக்கும் அல்வலீத் பின் தலால் முஸ்லிம் – கிறிஸ்தவர்கள் புரிந்துணர்வு மையத்தில் முதுநிலை ஆராய்ச்சி மாணவராக உள்ளார்.

பதர்கானின் மனைவியின் தந்தை அகமது யூசுப், காசாவில் ஆட்சியில் இருக்கும் ஹமாஸ் அரசில் வெளியுறவு துணை அமைச்சராக உள்ளார். அமெரிக்காவின் இஸ்ரேல் தொடர்பான வெளியுறவு கொள்கைகள் குறித்து பதகர்கான் கடுமையாக விமர்சித்து வந்தார்.  பதர்கானுக்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த ஆலோசகர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி கடந்த 17ம் தேதி உள்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் விர்ஜினியா மாகாணத்தின் பார்ம்வில்லியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்துவதற்கு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்த்து பதர்கானின் வழக்கறிஞர் ஹசன் அகமது வழக்கு தொடுத்தார். வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த மாவட்ட நீதிபதி,பாட்ரீசியா டொலிவர்,நீதிமன்றம் உத்தரவிடும் வரை பதர்கானை நாடு கடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

The post ஹமாஸ் அமைப்புடன் தொடர்பு குற்றச்சாட்டில் கைது இந்திய மாணவரை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Related Stories: