கோலான் பாலிப் வளர்ந்து கேன்சராகும் முன்னரே சரியான நேரத்தில் பரிசோதனைகள் செய்தால் எளிதாக வெல்லலாம்: டாக்டர் பழனிச்சாமி தகவல்

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் நேற்று கோலான் கேன்சர் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் பழனிச்சாமி கூறியதாவது: இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் பெருங்குடல், மலக்குடல் புற்று நோயும் ஆண்டுதோறும் அதிகரித்தபடியே உள்ளது. சாதாரணமாய் 50 வயதுக்கு மேற்பட்டவர்களைப் பாதிக்கும் இந்நோய் நம் நாட்டில் 40-45 வயதுள்ளவர்களைக் கூட தாக்குகிறது என்பது கவலை அளிக்கும் விஷயமாகும். குடல் புற்று நோய் (கோலான் கேன்சர்) நம்மில் 10 ஆயிரம் பேரில் ஒருவரை பாதிக்கும் சாத்தியம் உள்ளது. நோய் கண்டறியப்பட்ட பிறகு மூன்றில் இரண்டு பங்கு பேர் அந்த ஆண்டிலேயே உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. அதன் காரணம், இந்நோய் தாமதமாய் முற்றிய நிலையில் கண்டறியப்படுவதுதான்.

புற்று நோயாக வலுக்கும் முன்னரே பல ஆண்டுகளாய் இது பெருங்குடல் உள்பக்கம் சிறு மரு (பாலிப்) போல் தோன்றி மெல்ல வளரும். இந்த மரு நிலையில் அது நமக்கு எந்தவித உபாதையும் தராது. எனவே அந்த நிலையிலேயே அதைக் கண்டுபிடிக்க மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக பெருங்குடல் உள்ளே பார்க்கும் பரிசோதனை (கோலனாஸ்கோப்பி) செய்தால் மட்டுமே சாத்தியப்படுகிறது. உலக இரைப்பை குடலியல் நிறுவனம் ஆண்டுதோறும் மே மாதம் 29ம் தேதி இந்நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு டாக்டர் பழனிச்சாமி கூறினார்.

The post கோலான் பாலிப் வளர்ந்து கேன்சராகும் முன்னரே சரியான நேரத்தில் பரிசோதனைகள் செய்தால் எளிதாக வெல்லலாம்: டாக்டர் பழனிச்சாமி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: