அன்னம் தரும் அமுதக்கரங்கள்” பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது: முதலமைச்சர்க்கு வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள்

சென்னை: அன்னம் தரும் அமுதக்கரங்கள்” பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் முதலமைச்சருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் முதல்வரின் மனிதநேய விழாவாக சென்னை கிழக்கு மாவட்டம் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கழகத் தலைவரின் 72 வது பிறந்த நாளையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் உன்னதமான திட்டமானது 2025 பிப்ரவரி 20ஆம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு, வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சிறப்புமிகு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 20.2.2025 அன்று கொளத்தூரில் அண்ணியார் துர்கா ஸ்டாலின் திருக்கரங்களால் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். இச்சிறப்புமிக்க திட்டமானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, அப்பகுதி மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு காலை உணவு அருந்திவிட்டு, முதலமைச்சரை வாழ்த்தி வருகிறார்கள். “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் திட்டமானது இன்றுடன் (21.3.2025) தற்பொழுது ஒரு மாதம் கடந்து, 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக துறைமுகம், திரு.வி.க நகர், அம்பத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகள் என கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் வழங்கப்பட உள்ளது. திராவிட மாடலின் செயல்களில் ஒன்றாக இத்திட்டம் நடத்துவதில் சென்னை கிழக்கு மாவட்டம் பெருமை கொள்கிறது.

இச்சிறப்புமிக்க “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” திட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தினந்தோறும் கலந்து கொண்டு காலை உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக தொடர்ந்து 30வது நாளான இன்று (21.03.2025), துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, வால்டாக்ஸ் சாலை, 54ஆ வார்டு, உட்வார்பு பகுதி மற்றும் ஏழு கிணறு, 55 வது வார்டு ஏழு கிணறு தெருவில் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு காலை உணவு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் பி.ஸ்ரீராமுலு, பகுதி செயலாளர்கள் எஸ்.முரளி, ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.எம்.தேவன், மாமன்ற உறுப்பினர் தாஹா நவீன், வட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், சத்யநாராயணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post அன்னம் தரும் அமுதக்கரங்கள்” பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது: முதலமைச்சர்க்கு வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: