சென்னை: சென்னை அண்ணா சாலை மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் பைக் ரேஸில் ஈடுபட்ட 35 வாகனங்கள் பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணா சாலையில் விடிய விடிய இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர்
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி மீண்டும் பைக் ரேஸ், சிசிடிவியில் சிக்காமல் இருக்க நம்பர் பிளேட்டுகளை மறைத்து இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல், ஜிபி ரோடு, மெரினா காமராஜர் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இளைஞர்கள் நம்பர் பிளேட்டுகளில் துணி வைத்து மறைத்தும் நம்பர் பிளேட்டுகளை சுழற்றி வைத்தும் சாமர்த்தியமாக பைக் ரேஸ்களில் ஈடுபட்டதா போலீசார் தெரிவித்தனர்
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர் மட்டுமின்றி எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் இந்த விபத்தில் சிக்கி மரணமடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததையடுத்து பைக் ரேஸ் சம்பவங்கள் குறைந்தது
ஆனால் சமீப காலமாக பைக் ரேசில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், இளைஞர்கள் தொடர்ந்து பைக் ரேசில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் நேற்று நள்ளிரவு 1 .30 மணி அளவில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். இதனை காவல் துறையின் வாகன தணிக்கையின் போது கண்டனர். இதனையடுத்து கட்டுப்பாடுகளை மீறி அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய இளைஞர்களிடமிருந்து 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
The post சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 35 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.