அதேபோல், 35,000 ஏக்கரில் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் அவர்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இங்குள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு பிரச்சனை தலையாய பிரச்சனையாக இருந்து வருகிறது.
அரசு கொறடா ராமச்சந்திரன்: ஜன்மம் நிலங்கள் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதற்கான உரிய நடவடிக்கை நிச்சயமாக தீர்வு அரசு காணும் என்பதை தெரிவிக்கிறேன்.
பண்ருட்டி வேல்முருகன் (தவாக) : ஜன்மம் நிலத்தில் பெரிய நிறுவன எஸ்டேட்டுகள் குத்தகை காலம் முடிந்தபின்னரும், அங்கிருந்து செல்லாமலும், குத்தகை வரி செலுத்தாமலும், வாடகை அளிக்காமலும் இருந்து வருகின்றனர். எனவே, இந்த ஜன்மம் நிலத்தினை அரசுடமையாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பொன்.ஜெயசீலன்: பல்கலைக்கழக விதிகளின் படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
கோவி. செழியன்: கடந்த 10 ஆண்டுகளில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தொகை ரூ.5000 மட்டும் தான். ஆனால்,
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின், ஒன்றறை ஆண்டுகளிலேயே ரூ.5000 உயர்த்தியுள்ளார் என்பதை இப்பேரவையில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜன்மம் நிலங்கள் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்: அரசு கொறடா ராமசந்திரன் பதில் appeared first on Dinakaran.